தமன்னா இனிமே இப்படித்தான்

slider சினிமா
tamana – தமன்னா

 

இனி நயன்தாரா போல நாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதையுள்ள படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறாராம் தமன்னா.

தற்போது தமன்னா நடிப்பில்  ‘பெட்ரோமாக்ஸ்’, ‘ஆக்‌ஷன்’ படங்கள் தயாராகி வருகின்றன. மேலும், தெலுங்கு பிரபலம் சீரஞ்சிவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படமும்  விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், கதாநாயகியை மையமாகக் கொண்ட இரண்டு, மூன்று கதைகளை தமன்னா கேட்டிருக்கிறார். கதை பிடித்திருந்தால் கணிசமாகத் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் அவர் தயாராக உள்ளார். தனக்கு கதையில் முக்கியத்துவம் இல்லாத படம் என்றால், அது பெரிய நாயகர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் ஆர்வம் செலுத்த வேண்டாம் என்ற முடிவுக்கும் அவர் வந்துவிட்டார் என்கிறார்கள் தமன்னாவுக்கு நெருக்கமானவர்கள்.

பாலமுருகன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *