நானும் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் – இயக்குநர் பேரரசு

slider சினிமா

 

director perarasu – இயக்குநர் பேரரசு

நடிகர் விஜய்யை வைத்து  ‘திருப்பாச்சி, சிவகாசி’ என்று மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பேரரசு. இதன்பின்னர் இவர் பரத் உட்பட வேறு சில ஹீரோக்களை வைத்து படம் இயக்கினார். ஆனால், மீண்டும் விஜய்யை வைத்து அவரால் ஒரு படமும்கூட இயக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக விஜய்யின் 65-வது படத்தை இயக்குநர் பேரரசு இயக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்தி பரவியது.

இதற்கு இதுவரை விஜய் தரப்பிலிருந்து எந்த பதிலும், விளக்கமும் தரப்படவில்லை. இந்த செய்திக்கு இப்போது இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பேரரசு, “விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய்விடும் என்று நினைத்தேன். ஆனால், அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது. நான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் – actor vijay

 

விஜய்யின் 63-வது படமாக தயாராகியுள்ள அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதற்கு அடுத்த விஜய் படத்தை யார் இயக்கப் போவது என்பது இதுவரை அறிவிக்கப்படாமலே இருக்கிறது. இந்தப் படத்தின் வாய்ப்பு ஏற்கெனவே இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த பேரரசுக்கு கிடைக்குமா? அல்லது வேறு யாரேனும் இயக்குநருக்கா? என்கிற முடிவு விஜய்யிடம் இருக்கிறது.

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *