நயன்தாரா இயக்கத்தில்…!

slider சினிமா
Mohan-Nayan

இயக்குநர் மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்” படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நயன்தாரா. தனி ஒருவன் மெகா வெற்றியும் பெற்றது. இந்தப் படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக இயக்குநர் ராஜா முன்பே அறிவித்திருந்தார். மேலும், இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நயன்தாராவே நடிப்பார் என்றும், அவர் நடிப்பில் ஒரு நேர்த்தி இருக்கும் என்றும் புகழ்ந்திருந்த நிலையில், இப்போது “நயன்தாரா விரைவில் இயக்குநராகவும் ஆவார்” என்றும் பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா. அப்போது அவர், “அசின் முதல் நயன்தாரா வரையில் நாயகிகள் இல்லாமல் என் வெற்றி சாத்தியமாகி இருக்காது. சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளார். அவரது தேர்வுகளிலும் முடிவுகளிலும் அவ்வளவு நேர்த்தி வெளிப்படுகிறது. நடிப்பில் மட்டுமல்லாது சினிமா சார்ந்த அத்தனை தொழில்நுட்பங்களிலும் மிகுந்த தேர்ச்சியோடு இருக்கிறார். இதனால் அவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்றே நினைக்கிறேன். அதற்கான அத்தனைத் தகுதிகளையும் வளர்த்துக் கொண்டுள்ளார்’’ எனப் பேசினார்.

nayanthara – நயன்தாரா

 

ஏற்கெனவே தென்னக சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்துவரும் நயன்தாரா அவ்வப்போது சொந்தமாக படங்களும் தயாரித்து வருகிறார். இப்போது இயக்குநர் மோகன் ராஜா கூறியிருப்பதை வைத்து பார்த்தால், விரைவில் அவர் இயக்குநர் அவதாரம் எடுப்பதும் அரங்கேறும் என்றே தோன்றுகிறது.

செபா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *