நக்ஸலைட் வேடத்தில் சாய் பல்லவி!

slider சினிமா
sai pallavi – சாய் பல்லவி

மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் தான் சாய் பல்லவி அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு, தமிழ் படங்களும் இவருக்கு வந்து குவிந்தன. தமிழில் மாரி- 2, என்.ஜி.கே. உட்பட படங்கள் சில படங்களில் நடித்துள்ளார். இதுபோல தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது  ‘விராட பருவம், என்.சி 20’ ஆகிய  இரண்டு தெலுங்குப் படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இதில்,  ‘விராட பருவம்’ படத்தில் சாய் பல்லவிக்கு பெண் நக்சலைட் கதாபாத்திரமாம். போலீஸ் அதிகாரிக்கும் பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும், அதிரடி சண்டையும் அரசியலும் படத்தில்  இருக்கிறதாம்.

இப்படி நக்ஸலைட் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ள செய்தியால் கேரளாவில் அவருக்கு விமர்சனங்கள் கிளம்பியிருக்கிறது. வளர்ந்து வரும் நடிகை இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்துள்ளனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தப் படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவி தயாராகி வருகிறாராம். படப்பிடிப்பு தெலுங்கானாவிலுள்ள வாராங்கல்லில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *