கனிமொழி – ஆ.ராசாவுக்கு எதிராக களமிறங்கும் சி.பி.ஐ.!

slider அரசியல்
kanimozhi – கனிமொழி

தி.மு.க. பிரபலங்களான கனிமொழி எம்.பி. மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்ட 2ஜி வழக்குகளை மீண்டும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரிக்கவும், இவர்களை விடுதலை செய்த நீதிபதி ஓ.பி.ஷைனி வசமிருந்த வழக்கு பொறுப்புகளை நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் தி.மு.க. வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாயிருக்கிறது.

ஆ.ராஜா – A.RAJA

ஏற்கெனவே இந்த வழக்கில் கனிமொழி மற்றும் ஆ. ராசா மீதான 2ஜி வழக்கில் சி.பி.ஐ.யால் எந்தவொரு ஆதாரமுமே சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறேன் என்று தீர்ப்பளித்து நீதிபதி ஓ.பி. ஷைனி விடுதலை செய்திருந்தார். இதேபோல் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கும் ஜாமீன்களையும் கொடுத்து வந்தார் ஷைனி. இதன் பின்னணியில்தான் தற்போது நீதிபதி அஜய்குமார் குஹாரிடம் 2ஜி வழக்குகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டிருப்பது நடந்துள்ளது.

சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனியால்   கனிமொழி, ஆ. ராசா ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தபோதும், உடனடியாக டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்திருந்தது. இதுதான் இந்த வழக்கின் நிலை. ஆனால், தற்போது சிறப்பு நீதிமன்றத்திலேயே மீண்டும் வழக்கை விசாரிப்பதற்கான சாத்தியங்கள் ஆராயப்படுகிறதாம். முக்கியமாக, சி.பி.ஐ. தரப்பில் முன்பு தாக்கல் செய்யாத ஆதாரங்களை இப்போது தாக்கல் செய்து கீழ் நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹாரையே விசாரிக்க வைப்பது என்று டெல்லி அதிகார மையம் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saini-Kuhar

ஒருவேளை இந்த வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் மீண்டும் எடுத்து விசாரிக்க துவங்கினால் அது கனிமொழிக்கும், ஆ.ராசாவுக்கும் மட்டுமின்றி தி.மு.க.வுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய சறுக்கலாக அமையலாம், மேலும், இதன் எதிரொலிகள் வரவுள்ள தேர்தல்களில் தி.மு.க.வுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் கணிக்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

  • நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *