இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் அடுத்த படம்

slider சினிமா
director-bala – இயக்குநர் பாலா

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாலா கடைசியாக இயக்கி வெளியான படம்  ‘நாச்சியார்’. இதன்பிறகு நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க பாலா இயக்கிய  ‘வர்மா’ படம் நின்றுபோனது. இந்நிலையில், இப்போது பாலா தயாரிக்கவுள்ள படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை படத்தில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும்,  ‘மருது’ உள்ளிட்ட சில  திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.   மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும், விபாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பது  இயக்குநர் பாலாவாம்.

 

ஆர்.கே.சுரேஷ் – rk suresh

மலையாளத்தில் ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் இரண்டு வித்தியாசமாக தோற்றங்களில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு தோற்றத்திற்கு சுமார் 20 கிலோ உடல் எடையை கூட்டியும், பிளாஷ் பேக் காட்சிகளுக்காக 30 கிலோ உடல் எடையை குறைத்தும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. மலையாளத்தில் வைத்த ‘ஜோசப் என்ற பெயரே  தமிழில் வைக்கப்படவும் அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 பாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *