விஜய் சேதுபதிக்கு பதிலாக விஜய் ஆண்டனி!

slider சினிமா
vijay antony – விஜய் ஆண்டனி

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில்  அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள   ‘அக்னி சிறகுகள்’,  ‘காக்கி’,  ‘தமிழரசன்’ போன்ற படங்கள் விரைவில்  வெளியாகவுள்ளன.

இந்நிலையில் விஜய் ஆண்டனி  மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாள இயக்குநர் விபின் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி – vijay sethupathy

 

இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி மலையாளத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.  படப்பிடிப்பு டிசம்பர்  மாதத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *