சிரஞ்சீவி, அமிதாப்புடன் இணைந்த விஜய் சேதுபதி!

slider சினிமா
சைரா நரசிம்ம ரெட்டி – விஜய் சேதுபதி

தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம்   ‘சைரா நரசிம்மா ரெட்டி. இது  ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடித்துள்ளார். இவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

சைரா நரசிம்ம ரெட்டி – சிரஞ்சீவி

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், இப்படத்தின் டிரைலர்  இன்று (செப்டம்பர் 18-ம் தேதி) வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்க பல சினிமா நிறுவனங்கள் போட்டி போட்டன. இறுதியில் வென்றது ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான்.

 

சைரா நரசிம்ம ரெட்டி – அமிதாப்

 

சமீபமாக நேரடி தமிழ்ப் படங்கள் தயாரிப்பில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தது சூப்பர் குட் பிலிம்ஸ். இப்போது சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை வாங்கி தமிழில் ரிலீஸ் செய்வது மூலம் மீண்டும் தமிழ்ப் படங்கள் தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது.

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *