“பிரில்லியனட் ஒர்க் கண்ணா” – இளம் இயக்குநரை பாராட்டிய ரஜினி!

slider சினிமா
மாஃபியா

‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது அருண் விஜய்யை ஹீரோவாகவும்,  பிரசன்னாவை வில்லனாகவும் வைத்து ‘மாஃபியா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் இப்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, “பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு’’ என்று இயக்குநரையும்  ‘மாஃபியா’ படக்குழுவினரையும் பாராட்டினாராம்.

 

இயக்குநர் கார்த்திக் நரேனுடன் ரஜினி

இப்படத்தின்  டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதில் அருண் விஜய்யும், பிரச்சன்னாவும் “ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? – நரியோட தந்திரமா?’’ என்று பேசும் வசனம்  சமூக வலைத்தளங்களில் பெரியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *