குற்றம் குற்றமே – நயன்தாராவின்  ‘நெற்றிக்கண்’

slider சினிமா

‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ், அடுத்ததாக நயன்தாராவை வைத்து  ‘நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறாராம். மேலும், இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான  ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.

 

ப்ளைண்டு கொரியன் படக் காட்சி

 

‘பிளைண்டு’ படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால், அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார்.  சூ ஹாவின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சியாக, கி-சியாப் என்பவர் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால், வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.

நடிகை  நயன்தாரா இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *