தனுஷுடன் மோதும் விஜய் சேதுபதி!

slider சினிமா

 

விஜய் சேதுபதி

 

எம்.ஜி.ஆர். நடித்த ’ எங்க வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட பல மெகா பட்ஜெட் படங்களை தமிழில் தயாரித்த பராம்பரிய நிறுவனம் தான் நாகிரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ். இந்த நிறுவனம் இப்போது தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை வைத்து  ‘சங்கத் தமிழன்’ படத்தை தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தை   ‘வாலு, ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளனர்.

அண்மையில்  ‘சங்கத் தமிழன்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . அதனைத் தொடர்ந்து படத்தில்   ‘கமலா…’  என்ற பாடலும் வெளியானது. இந்த படத்தில் பிரான்சிஸ் எழுதிய  ‘சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளது விசேஷமாக கவனிக்கத்தக்கது.

‘சங்கத் தமிழன்’ படம் அக்டோபர் 27-ம் தேதி அன்று தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. ஆனால், இப்போது தீபாவளி கழிந்து நவம்பர் 4-ம்  தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அன்று வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘அசுரன்’ வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தென்னாடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *