ஐ.என்.எஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடரும் நெருக்கடி!

slider அரசியல்
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ். மீடியா என்கிற நிறுவனத்துக்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு முறைகேடாக பெறுவதற்கு தன் பதவியை பயன்படுத்தினார் என்கிற வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 11-ம் தேதி) டெல்லியில் இந்த வழக்கில் ஜாமீன்கோரி ப.சிதம்பரம் மனு செய்திருந்தார். இந்த  மனு மீது நீதிபதிகள் கேள்வி கேட்டதன் வகையில் ப.சிதம்பரம் இந்த ஜாமீன் மனுவை திரும்ப பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகியிருக்கிறது.

மத்திய அமைச்சராக இருந்த ப சிதம்பரம், முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ போலீசார் சில மாதங்களுக்கு முன்பு  சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். பின்னர் சில வாரங்களில் ஜாமினில் விடுதலை ஆனார். இதற்கிடையே சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சிதம்பரம் மனு தள்ளுபடி இதையடுத்து தன்னை வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த மாதம் 20-ஆம் தேதி ப சிதம்பரத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வரும் 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் ப.சிதம்பரம் இருக்கும் நிலை உள்ளது. இதில்தான் ஜாமீனில் விடுதலையாவதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு செய்திருந்தார். ப.சிதம்பரம் தனது மனுவில், “மத்திய அரசின் தூண்டுதல் பேரில் விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும், தன்னுடைய கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் (செப்டம்பர் 11-ம் தேதி)  டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  டெல்லி நீதிமன்ற நீதிபதி, “சிதம்பரத்திடம் ஜாமின் கோரி கீழ் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக இங்கு வந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் நீதிமன்றம் அனுப்பியது.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நேற்று (செப்டம்பர் 12-ம் ம்தேதி) ப சிதம்பரம்  திரும்ப பெற்றுள்ளார். இதன்மூலம் வரும் 19-ம் தேதிக்கு முன்பு ப.சிதம்பரம் இந்த வழக்கில் விடுதலையாகும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அடுத்து இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்ய தயாராகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு போகிற போக்கை பார்த்தால் ப.சிதம்பரம் திகார் சிறையிலிருந்து விடுதலையாவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே தோன்றுகிறது.

  • விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *