அஜித்தின் அடுத்த படம் பற்றி முக்கிய தகவல்!

slider சினிமா

 

 

அஜித்

அஜித்தின் அடுத்த படத்தை ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கிறார். இயக்கப் போவதும் அதே  ’சதுரங்க வேட்டை’ எச்.வினோத் தான். இது அஜித்துக்கு 60-வது படமாக வெளிவரவிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் இந்த  60-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித்  இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில்,   “அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று யார் யார் இப் படத்தில் நடிக்கிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்கள்.

இந்தப் படம் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாகவுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *