தனுஷ் படத்துக்கு தடையா?

slider சினிமா
தனுஷுடன் சுப்புராஜ்

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அசுரன்’  படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் நடத்துகின்றனர். இந்தப் படத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்  என்கிற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குமுன்பு எம்.ஜி.ஆரின்  ‘நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், நம்நாடு’ ஆகிய பெயர்களில் ஏற்கனவே படங்கள் வெளி வந்துள்ளன. அண்மையில்கூட  ‘எங்க வீட்டுப் பிள்ளை’ தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று மாற்றி விட்டனர்.  இதேபோன்று இப்போது  ‘உலகம் சுற்றும் வாலிபன்’ தலைப்பை பயன்படுத்தவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து  ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் தயாரிப்பாளர் சாய் நாகராஜன் கூறும்போது,  “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே, தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்றார்.

இதே போன்ற பிரச்னையில்  நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட நெருக்கடி இப்போது தனுஷுக்கும் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படத்துக்காவது  ‘எங்க வீட்டு பிள்ளை’ என்பது ‘ நம்ம வீட்டு பிள்ளை’ என்றானது, தனுஷின் ’உலகம் சுற்றும் வாலிபன்” என்ன வாலிபனாகப் போகிறதோ?

  • பாலமுருகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *