பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டை வீரராக ஆர்யா! Reviewed by Momizat on .      [caption id="attachment_1242" align="alignnone" width="800"] ஆர்யா[/caption]   இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இதுவரை  ‘அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா      [caption id="attachment_1242" align="alignnone" width="800"] ஆர்யா[/caption]   இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இதுவரை  ‘அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா Rating: 0
You Are Here: Home » slider » பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டை வீரராக ஆர்யா!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டை வீரராக ஆர்யா!

    

ஆர்யா

 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இதுவரை  ‘அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்ததாக  ஜார்கண்டை சேர்ந்த அரசியல் பிரபலம் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள பாலிவுட் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருந்து வந்தார் ரஞ்சித்.

ரஞ்சித்

இந்த பாலிவுட் படத்தை இயக்கி முடிக்க அதிக நாட்கள் தேவைப்படுவதால், அதற்குள் ஒரு தமிழ் சினிமா எடுக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ரஞ்சித். எனவே, குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை படமாக்கவிருக்கும் ரஞ்சித், படத்திற்கான கதையை நடிகர் ஆர்யாவிடம் கூறியிருக்கிறார். ஆர்யாவுக்கும் கதை பிடித்துப்போக, நடிக்க சம்மதித்து விட்டாராம்.  விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆர்யா நடித்த படங்கள் சரியாக ஓடாததால் மார்க்கெட் சரிந்திருந்தவருகு இப்போது வெளியாகியுள்ள  ‘மகாமுனி’ படம் மீண்டும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

  • பாலமுருகன்

About The Author

Number of Entries : 286

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top