மீண்டும் கூட்டணி சேரும் கவுதம் மேனன்-சூர்யா!

slider சினிமா
சூர்யா

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில்  2003-ம் ஆண்டு  வெளியான  ‘காக்க காக்க’ படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு சூர்யாவை வைத்து ‘வாரணம் ஆயிரம்’  படத்தை கவுதம் மேனன் இயக்கினார். இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் சூர்யா நடித்தார்.  இதன்பிறகு இருவரும் இணையவில்லை.

இடையில் 2014ம் ஆண்டுவாக்கில் இணையும் வாய்ப்பு வந்தது. ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் அது நடக்கவில்லை. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் ‘காப்பான்’படம் வரும்  20-ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை முடித்த பிறகு,  சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யா. இதற்கடுத்து பாலா இயக்கும் ஓர் படத்திலும் நடிக்கவுள்ளார். இதன்பிறகே  கவுதம்மேனன்  இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா என்று கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *