‘பொன்னியில் செல்வன்’ படத்தில் 12 பாடல்கள் இடம் பெறுகிறது!

slider சினிமா

மறைந்த எழுத்தாளர் கல்கி அவர்களின் படைப்புகளில் அதிக கவனம் ஈர்த்தது  ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல், ஏறக்குறைய 800 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் இரண்டு பாகமாக திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது. மணிரத்னம் இயக்குகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வைரமுத்து- மணிரத்னம் – ரஹ்மான்

 

மேலும், இந்த படத்தில் நடிகர்கள் பார்த்திபன், ஜெயராம் மற்றும் நடிகைகள் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள பாடலுக்கு  நாவல் நடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் சொற்களை இந்த கால இளைஞர்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளில் வைரமுத்து புதுமை செய்யவிருப்பதாகவும், மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 பாலமுருகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *