நெருக்கடியில் சோனியா காந்தி – ஏன், ஏதற்கு?

slider அரசியல்
ஜோதிராதித்யா சிந்தியா – கமல்நாத்

மத்திய பிரதேசத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கமல்நாத் இருந்து வருகிறார். இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடபெற்றுவரும் சில மாநிலங்களில் ஒன்று மத்தியபிரதேசம். காங்கிரஸ் தலைமைக்கு இந்த மாநிலமும், இங்கு நடைபெறும் ஆட்சியும் அரசியல்ரீதியாக ரொம்பவே முக்கியமானது. அப்படிபட்ட இந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அம் மாநில காங்கிரஸாரிடையே  போட்டி பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இங்கு முதல்வர் கமல்நாத்துக்கு என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. இதேபோல் துணை முதல்வர் ஜோதிராதித்ய சிந்தியா என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. இதுதவிர முன்னாள் தலைவர் திக்விஜய் சிங்குக்கும் ஒரு கோஷ்டி செயல்பட்டு வருகிறது. இந்த கோஷ்டியும் மாநில தலைவர் பதவிக்கு பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் தலைவர் சோனியா காந்தியின் பார்வைக்கு சென்றிருக்கிறது. முதலில் முதல்வர் கமல்நாத்தை அழைத்து பேசினார் சோனியா. அடுத்து வரும் செப்டம்பர் கடந்த 10-ம் தேதி துணை முதல்வர் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் இது குறித்து பேசவுள்ளார்.

மாநில முதல்வராக இருக்கும் கமல்நாத் எப்படியும் மாநில தலைவர் பதவியை பிடிக்க நினைக்கிறார். அப்படி தனக்கு கிடைக்கவிலையென்றால் தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு அதை பெற்றுத் தர நினைக்கிறார். துணை முதல்வர் ஜோதிராதித்யா நிலையும் இப்படித்தான் இருக்கிறது. இதில் முன்னாள் முதல்வரான திக் விஜய் சிங்கோ எப்படியும் தான் இந்த பதவிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாத இருக்கிறார் என்கிறார்கள் மத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியே மிகச் சொற்ப வித்தியாசத்தில் தான் நடந்து வருகிறது. இதில் மாநில தலைவர் பதவிக்கு இவ்வளவு போட்டி ஏற்பட்டிருப்பதின் பின்னணியில் ஆட்சிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, அதன்மூலம் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டுவிடுமோ என்கிற கவலையும், நெருக்கடியும் காங்கிரஸின் டெல்லி தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிற கருத்தும் தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது.

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *