விராட் கோஹ்லி – ஸ்டீவ் ஸ்மித் இடையே பலத்த போட்டி! Reviewed by Momizat on .   [caption id="attachment_1210" align="alignnone" width="700"] Virat-Kohli - விராத் கோலி[/caption] இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.   [caption id="attachment_1210" align="alignnone" width="700"] Virat-Kohli - விராத் கோலி[/caption] இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது. Rating: 0
You Are Here: Home » slider » விராட் கோஹ்லி – ஸ்டீவ் ஸ்மித் இடையே பலத்த போட்டி!

விராட் கோஹ்லி – ஸ்டீவ் ஸ்மித் இடையே பலத்த போட்டி!

 

Virat-Kohli – விராத் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் ஒன்றில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஒன்றில் இங்கிலாந்து வென்றுள்ளது. ஒன்று டிரா ஆகியுள்ளது. நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆஷஸ் தொடர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை போன்று பரபரப்பும், முக்கியமும் கொண்டவை.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே ஆஸ்திரேலிய பிரபலம் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நான்கு இன்னிங்ஸில் இரண்டு சதம், ஒரு இரட்டை சதம், ஒரு அரைசதம் அடித்துள்ளார். இதன்மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 64 சதவீதத்துக்கும் மேலான சராசரி வைத்துள்ளார்.

இதனால் தற்போதைய காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற விவாதம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில்தான் போட்டி!

 

steve smith – ஸ்டீவ் ஸ்மித்

 

இந்நிலையில் இருவரில் யார் சிறந்த வீரர் என்பது குறித்து ஆஸ்திரேலிய பிரபலமும், முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான  வார்னே கூறுகையில் ‘‘இதுவரை நடந்து முடிந்துள்ள டெஸ்ட் போட்டிகளை வைத்து பார்க்கும்போது விராட் கோலி, ஸ்மித் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவது மிகவும் கடினம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது ஸ்மித்தாகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், விராட்கோலி ஒரு லிஜெண்ட். அவர்  உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது விராட் கோலியாகத்தான் இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்த வரைக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆனால் தற்போது நாம் பார்த்த வரைக்கும் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சிறந்த வீரர். என்னைப் பொறுத்த வரைக்கும் விராட் கோலி ரிச்சர்ட்சனை பின்னுக்குத் தள்ளிவிட்டார்’என்று கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.நந்தன்

About The Author

Number of Entries : 286

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top