லண்டன் விமான நிலையத்தில் சிசிடி கேமரா வேலை செய்யவில்லை! – சவுந்தர்யா ரஜினிகாந்த் Reviewed by Momizat on .   [caption id="attachment_1204" align="alignnone" width="650"] soundarya rajinikanth - சவுந்தர்யா ரஜினிகாந்த்[/caption]   சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்தின் இர   [caption id="attachment_1204" align="alignnone" width="650"] soundarya rajinikanth - சவுந்தர்யா ரஜினிகாந்த்[/caption]   சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்தின் இர Rating: 0
You Are Here: Home » slider » லண்டன் விமான நிலையத்தில் சிசிடி கேமரா வேலை செய்யவில்லை! – சவுந்தர்யா ரஜினிகாந்த்

லண்டன் விமான நிலையத்தில் சிசிடி கேமரா வேலை செய்யவில்லை! – சவுந்தர்யா ரஜினிகாந்த்

 

soundarya rajinikanth – சவுந்தர்யா ரஜினிகாந்த்

 

சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவும் அவரது கணவர் விசாகனும் சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியபோது விசாகன் பாஸ்போர்ட் திருடு போய் இருந்தது. இதனால் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது.  இந்த இக்கட்டால் இருவரும் செய்வதறியாது தவித்துப் போயினர்.

இதன்பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்துள்ளார்கள்.    இது குறித்து லண்டன் காவல் நிலையத்தில் விசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பை திருடுபோனது குறித்து விசாரணை நடைபெற தொடங்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரஜினி மகள் சவுந்தர்யா கூறுகையில்,  “கடந்த 1-ம் தேதி ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் லவுஞ்சில் நாங்கள் காருக்காக காத்திருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்கச் சொன்னார்கள்.  அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது. அதில் எமிரேட்ஸ் லவுஞ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது? என் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது.”  என்று கூறியுள்ளார்.

About The Author

Number of Entries : 286

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top