அந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறேன் – நடிகை டாப்ஸி

slider சினிமா
tapsi – டாப்ஸி

இயக்குநர் வெற்றி மாறனின் ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்சி தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.  இப்படி தொடர்ந்து விளையாட்டு வீராங்கனையாக நடிக்கவரும் வாய்ப்புகளை தவிர்க்காமல் விருப்பத்துடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் டாப்சி.

குறிப்பாக,  ‘சூர்மா’ என்கிற இந்திப்  படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்த டாப்சி அடுத்து ‘சாத் கி ஆங்க்’படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்தார். இதனையடுத்து  ‘ராஷ்மி ராக்கெட்’ படத்தில் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதவிர இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி டாப்சி கூறும்போது, “எனக்கு வரும் படங்கள் நல்ல படங்களாக இருக்கிறது. அதனால் அவற்றை தவற விடுவதில்லை. மேலும் இன்றைய நிலையில் எனக்கு வரும் வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். என்னைத் தேடி வரும் படங்களில் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எதுவும் என் கையை விட்டு நழுவிப் போய்விடக்கூடாது என்கிற விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *