ஸ்டாலினை பாராட்டிய பா.ஜ.க. பிரபலம் – கூட்டணிகளில் சலசலப்பு!

slider அரசியல்
CPRadhakrishnanBJP

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில், தமிழக பா.ஜ.க. பிரமுகர்  சி.பி.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். அந்த விழாவில், ஸ்டாலினை வெற்றித் தளபதி என்றும், தேர்தலில் பா.ஜ.க.வை தி.மு.க. வீழ்த்திவிட்டதாகவும் பேசவே இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிகழ்ச்சியில், சி.பி. ராதாகிருஷ்ணன் தன்னை குறித்து பேசிய பேச்சுக்கு பின்னர் ஸ்டாலின் பேசினார்.  அப்போது அவர், ‘’பா.ஜ.க.வின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, மனம் திறந்து பேசியுள்ளார். அவர்களை வீழ்த்திவிட்டோம் என்று சொன்னார். நான் அதை கொஞ்சம் திருத்திச் சொல்கிறேன். நாங்கள் வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம். நாங்கள் என்றுகூட சொல்லவிரும்பவில்லை, மக்கள் தோற்கடித்துள்ளனர்’’ என்ற பேச்சுக்கு பலத்த கரவொலி எழுந்திருக்கிறது.

 

M.K.-stalin

 

இந்த நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பிருந்துதான் தமிழக அமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார் என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. பிரமுகரான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசவும், அதற்கு ஸ்டாலினும் நயம்தெறிக்கும் வகையில் பதில் அளித்திருப்பதையும் பார்க்கையில், இதன் போக்கு வளர்ந்து வளர்ந்து ஒருகட்டத்தில் கூட்டணியில் இணையலாம் என்பது போன்ற பார்வையிலும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெருத்த விவாதம் தொடங்கி விட்டது.

இது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். அப்படி ஒருவேளை நடக்கும்பட்சத்தில் காங்கிரஸைவிட அதிக அதிர்ச்சிக்குள்ளாகும் கட்சி எது என்றால், இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமைச்சர் ஜெயக்குமார் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வாகத்தான் இருக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் கருத்தாளர்கள்.

எம்.டி.ஆர். ஸ்ரீதர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *