ராணுவ கமாண்டோவாகிறார் தமன்னா!

slider சினிமா

 

thamana – தமன்னா

தமிழின் முன்னணி நடிகையான தமன்னா இப்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கிறார். இவர் ஆண்டுக்கு ஒரு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது இயக்குநர் சுந்தர். சி. இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக  ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.

 

இது குறித்து இயக்குநர் சுந்தர் சி. கூறும்போது,  “’ராணுவ பெண் கமாண்டோவாக தமன்னா நடிக்கிறார். விஷாலுடன் இவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகளை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் கற்று சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மற்ற காட்சிகள் ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இப்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது’’  என்றார்.

தமிழ் நடிகைகளில் திரிஷா, வரலட்சுமி என்று ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவும்
‘ஆக்‌ஷன்’ என்று பெயரிடப்பட்ட படத்திலே ஆக்‌ஷன் காட்டவுள்ளார். தமன்னாவுக்கு ஆக்‌ஷன் செட்டாகுமா? ஆக்‌ஷன் செட்டாகாதா? என்பது ஆக்‌ஷன் வெளியானவுடன் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *