சிக்கி தவிக்கும் இயக்குநர் ராஜூ முருகன்

slider சினிமா
gypsy tamil movie

ராஜூ முருகன் இதுவரை ‘குக்கூ’, ’ஜோக்கர்’ படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள படம்தான் ‘ஜிப்ஸி”. நாடோடிகளின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னரே தணிக்கை குழு சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டது. ஆனால், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் பல இருப்பதனால், தணிக்கை குழு சான்றிதழ் அளிக்கவில்லை. ஆகவே, படக்குழு மறுதணிக்கைக்கு அனுப்ப, அங்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு செல்கிறார்கள்.

‘ஜிப்ஸி’ படத்தில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், அதனால் தான் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வின் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்ய நாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகளும் உள்ளனவாம்.

 

raju murugan – ராஜூ முருகன்

 

இதுபற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில், “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்சினை. இருமுறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும்,  உ.பி. முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.க.வா?” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் தணிக்கை விஷயத்திலே இவ்வளவு அரசியல் என்றால், படம் வெளியானவுடன் இன்னும் என்னென்ன அரசியல் பரபரப்புகளெல்லாம் நடக்கவிருக்கிறதோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *