ஸ்டாலின் – நடிகர் விஜய் சந்திப்பு – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

slider அரசியல்
stalin – vijay

சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன்பிறந்த  சகோதரி செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் இளைய தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார்.  அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின், விஜய்யுடன் சகஜமாக பேசினார். இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு வரும் வேளையில், இப்போது அதிரடி கருத்துகளுக்கு பெயர்போன தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் தன் பங்குக்கும் ஒரு குண்டை போட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

 

அமைச்சர் ஜெயக்குமார்

 

ஆகஸ்ட் 4-ம் தேதி  செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார், “நடிகர் விஜய் தி.மு.க.வில் தாராளாமாக சேர்ந்து கொள்ளட்டும். தி.மு.க. யாரை சேர்க்க நினைத்தாலும் சேர்க்கட்டும். அ.தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளது. தி.மு.க.வின் வாக்கு வங்கி தொடர்ந்து குறைந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். தி.மு.க. நடிகர் விஜய்யை கட்சிக்குள் சேர்க்க பார்க்கிறது. தி.மு.க. யாரை போய் பார்க்க வேண்டுமோ பார்க்கட்டும். ரஷ்யா, சீனா அதிபர்களை கூட தி.மு.க. போய் சந்திக்கட்டும், அவர்களையும் கட்சிக்குள் சேர்த்தாலும்  எங்களுக்கு கவலை கிடையாது’’ என்று  அமைச்சர் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினி அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.வுக்கும் நெருக்கமாக இருப்பதால், இதற்கு கடும் போட்டி கொடுக்க தி.மு.க. விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறதா என்று கேள்விகளும் அங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இதுபோன்று பேசுவது தேவையற்றது என்கிற குரல் அ.தி.மு.க.வுக்குள்ளும் எழும்ப தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர்.  தமிழகத்தில் அதிகளவு ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சு எந்தெந்த அரசியல் விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்பதை வரும் நாட்கள் நமக்கு தெரியப்படுத்தலாம்.

நிமலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *