புதிய முயற்சியில் சிவகார்த்திகேயன்

slider சினிமா
SUPER MAN SIVAKARTHIKEYAN

உலகளவில் ஹாலிவுட் உட்பட   ‘அயன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, பேட்மேன், எக்ஸ்மேன், தோர்’ என்று அதிகமான சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி பெரும் வசூல் குவித்து வருகின்றன. பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் நடித்த  ‘கிரிஷ்’, ஷாருக்கானின்  ‘ரா ஒன்’ போன்ற படங்களும் வசூலைக் குவித்துள்ளன.

இதன் பிரதிபலிப்பு தெலுங்கில் பிரபாஸ் நடித்த  ‘சாஹோ’ படம். இப்போது தமிழிலும் சூப்பர் ஹீரோ படம் மீது ஆர்வம் எழுந்துள்ளது. குழந்தைகளுக்குப் பிடித்த ஹீரோவான சிவகார்த்திகேயன்  ‘ஹீரோ’ என்ற பெயரிலேயே சூப்பர் ஹீரோ கதையில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.  இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ முகமூடியை கையில் வைத்திருப்பது போன்று காட்சி உள்ளது. சைபர் கிரைம் குற்றங்களை மையமாக வைத்து இந்த படம்  எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

 

hero sivakarthikeyan

 

 

இதில் கதாநாயகியாக டைரக்டர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடித்துள்ளார்.   ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் படக்குழு தயாராகி வருகிறதாம்.

 

பாகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *