நயன்தாரா நடிக்க தடை?

slider சினிமா
நயன்தாரா

சினிமா உலகில் ஒரு படம் முடிந்தபிறகு ரசிகர்களிடம் பிரபலப்படுத்த விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.  இதில் அந்தப் நடித்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இயக்குநர் உட்பட முக்கிய பிரபலங்கள் கொண்டு சிறப்பு செய்வது நடைமுறையில் இருந்து வழக்கம். இப்படியான நிகழ்ச்சிகளில் நம்பர் – ஒன் நடிகையான நயன்தாரா கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது குறித்து தமிழ் சினிமா வட்டாரத்திலே பெரும் கொந்தளிப்பு உண்டு.

இந்த கொந்தளிப்பு இப்போது தெலுங்கு சினிமாவில் நயன்தாரா நடிக்க தடைபோடுமளவுக்கு சென்றுள்ளது. தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும்  ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்கிற படத்தை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் தயாரித்து வருகிறார். இப்படம் பல கோடி செலவில் மெகா பட்ஜெட் படமாக தயாரிக்கப்படுவதால் பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ராம் சரண் ஒப்பந்தம் செய்யும்போதே நயன்தாராவிடம் கேட்டுக்கொள்ள அவரும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கலந்து கொள்வதாக கூறினாராம்.

 

nayanthara

 

 

ஆனால்,  ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் முடிந்து அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பர வேலைகளில் ராம் சரண் ஈடுபட்டுள்ளார்.  இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்பதை உறுதி செய்ய, ராம் சரணின் மேனேஜர் நயன்தாராவை பலமுறை போனில் அழைத்தும் சரியான பதில் இல்லை என்கிறார்கள். இந்த விஷயம் சிரஞ்சீவிக்கும், ராம் சரணுக்கும் தெரியவர அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம்.

இதுபற்றி  நயன்தாரா தரப்பில், ‘படங்கள் அதன் கதையைப் பொறுத்தே வெற்றி பெறுகிறது. புரமோஷனை பொறுத்து அல்ல’ என பதில் தந்தார்களாம். இதனால் நயன்தாரா மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவும் அவர் தெலுங்கில் நடிப்பதற்கு தடை விதிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறது டோலிவுட் வட்டாரம்.

 

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *