
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்தால் முடங்கிப் போனது. ஒரு வழியாக இந்தப் படம் செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு விளம்பரங்களும் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் வெளியாவதிற்கு மீண்டும் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரம் மீதான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் செப்டம்பர் – 6-ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.