தமிழகத்தின் அடுத்த பா.ஜ.க தலைவர் யார்?

slider அரசியல்
tamilisai soundarrajan – தமிழிசை சௌந்தர்ராஜன்

 

கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில்  தமிழகத்தில்  பா.ஜ.க. தோல்வியை கண்டது. இது தொடங்கியே தமிழகத் தலைவராகவுள்ள தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்படுகிறார் என்றும், புதிய தலைவருக்கு பலர் களத்தில் மோதுகிறார்கள் என்கிற தகவலும் வந்தபடி இருந்தது. இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான மோதல் சூடுபிடித்துள்ளது.

இந்த மோதல் களத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா,  மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி. ராதாகிருஷ்ணன்,  முன்னாள் தமிழக அமைச்சர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. இளைஞர் அணியின் தேசிய துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம்,  தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் வானதி சீனிவாசன் மற்றும் அக்கட்சியின் செய்திதொடர்பாளர் கே.டி. ராகவன் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனேகமாக இந்த ஏழு பேரில் ஒருவர் தான் தமிழக பா.ஜ.க. தலைவராக ஆவார் என்றும், அப்படி தமிழக பா.ஜ.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் காலத்தில் பா.ஜ.க.வின் மத்திய மேலிடம், தமிழகத்தில் பா.ஜ.க.வை ஒரு ஆகப்பெரும் சக்தியாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கவுள்ளதால், அதற்கு ரொம்பவும் பொருந்தக்கூடியவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இந்த நேரத்தில் வேறெந்த பரிசோதனை முயற்சிகளிலும் மத்திய மேலிடம் இறங்காது என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொ.ரா.ஸ்ரீ.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *