சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

slider சினிமா

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன்  எழுபதாவது  நாளை கடந்து  சென்று கொண்டிருக்கிறது.  இதில் இயக்குநர் சேரன் முக்கிய போட்டியாளராக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

 

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின்போது, பார்வையாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்  விதமா அமைந்த நிகழ்வில் சேரன் கூறும்போது, “நிச்சயம் எனது ‘கம்பேக்’ ஒரு ‘ஸ்ட்ராங்கான கம்பேக்’ ஆகத்தானிருக்கும். அதற்கான பேச்சுவார்த்தையை முடித்து விட்டுத்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்க உள்ளேன். வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்று கூறினார்.

இது குறித்து தமிழ் சினிமாத் துறையின் முக்கிய புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம்.  “ஆமாம். சேரன் சொல்வது உண்மைதான். ஆகஸ்ட் 2-ம் தேதி, சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பாகவே இப்படி ஒப்பந்தம் முடிவாகி விட்டது. பெரிய இயக்குநர் என்றபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒப்பந்தமானதால் சில விஷயங்களை உள்ளே செல்லும் முன்பு தெரிவிக்கவில்லை. இப்போது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதால், அங்கேயே சொல்லியுள்ளார். இன்னும் சொல்லப் போனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேரன் செல்ல விஜய் சேதுபதியின் ஆலோசனையும் ஒரு காரணம்’’ என்றார்கள்.

இயக்குனர் சேரன் பிக்பாஸ் போட்டியில் வெற்றியாளராக ஆவார் என்பது பற்றி, இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், விஜய் சேதுபதி வைத்து படம் இயக்கினால்  பழையபடி பெரும் அளவுக்கு பேசப்படுவார் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *