சிவகார்த்திகேயனை அப்படி அழைப்பது வருத்தம் தான் –ஐஸ்வர்யா ராஜேஷ்

slider சினிமா
aishwaryarajesh – ஐஸ்வர்யா ராஜேஷ்

 

தமிழ் சினிமாவில்  ‘தர்மதுரை’,  ‘காக்கா முட்டை’,  ‘கனா’ படங்கள் மூலம் வளர்ந்து வரும் நடிகையாகி, தனி கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த போதிலும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக விரைவில் வெளிவரவிருக்கும்  ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக  ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்து வருவது கோலிவுட் வட்டாரத்தில் பலரது புருவங்களை உயர்த்திருக்கிறது.

இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  “ரொம்ப சின்ன வயதிலேயே  இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக  ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்தேன். அந்தப் படம் தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எனவே தங்கையாக நடிப்பதற்காக வருத்தப்படவில்லை. அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனுக்கும், விக்ரம் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்தால் சரியாகி விடும். சிவாஜி – சாவித்திரி போன்றவர்கள் அப்படி நடிக்கவில்லையா என்ன? சிவகார்த்திகேயனை அண்ணா என்று அழைப்பதில் எனக்கும் வருத்தம் தான். படம் பார்த்தால் இந்த கேள்விகள் எழவே எழாது” என்று மிக யதார்த்தமாகப் பேசியிருக்கிறார்.

 

 

aiswarya rajesh

நடிப்பை நம்பும் எந்த ஒரு கலைஞனும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொல்ல வேண்டிய சொல்லைத்தான் ஐஸ்வர்யா ராஜேஷும் சொல்லியுள்ளார். அவரது நம்பிக்கையும், துணிச்சலும் மிகுந்த பாராட்டதலுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *