விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் தனுஷ்

slider சினிமா

 

dhanush – தனுஷ்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தான் நடித்த சில படங்களுக்கு பாடலும் எழுதியிருக்கிறார். இவையாவும் தமிழ் சினிமாவுக்காக எழுதியது. இப்போது சொந்த மொழி தாண்டி முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றுக்கும் பாடல் எழுதியிருக்கிறார் தனுஷ். அந்தப் பாடலை அவரே பாடியும் உள்ளார்.

‘பிரதர்ஸ் டே’ என்ற மலையாளப் படத்துக்குத்தான் இந்த இரண்டையும் தனுஷ் செய்துள்ளார். நாதிர்ஷா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிருத்விராஜ், மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரயாகா மார்ட்டின், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படமும் தனுஷ்  தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

brothers day – பிரதர்ஸ் டே

தமிழ் சினிமா ஹீரோக்களில் விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் உண்டு. அவர் படங்கள் மொழி மாற்றாமலே அம்மாநிலத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டுதான் தனுஷூம் கேரளா பக்கம் உள்நுழைய முயற்சி எடுப்பதன் அறிகுறிதான் இவையெல்லாம் என்கிறார்கள் கோலிவுட் விமர்சகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *