முதன் முறையாக சந்தானம்

slider சினிமா
santhanam – சந்தானம்

நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடிக்க மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவர் ஹீரோவாக  நடித்த  ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’,  ‘தில்லுக்கு துட்டு 2′ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அடுத்து சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களைக் கவர்ந்தது.  இதன்பிறகு ஷங்கரின் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘டகால்டி’ படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

 

நடிகர் சந்தானம்

 

இந்த படத்துக்கு அடுத்து சந்தானம் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம்  கூட்டாக தயாரிக்கவுள்ளனர். இதன் டைட்டில் லுக் போஸ்டரை வரும் செப்டம்பர்  5-ம் தேதி அன்று வெளியிட  படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *