தி.மு.க. மீது அதிப்ருதியில் கி.வீரமணி

slider அரசியல்
veeramani – வீரமணி

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்தபிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அப்போது, அ.தி.மு.க.விலிருந்து விலகி தினகரன் துவங்கிய அ.ம.மு.க.வில் இணைந்து,  தீவிரமாக செயல்பட்டவர் தங்க. தமிழ்ச்செல்வன். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அ.ம.மு.க.வில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.  அவர் கட்சியில் இணைந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவருக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பது தி.மு.க.வினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ. ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோரோடு இணைந்து தங்க தமிழ்ச்செல்வன் செயல்படுவார் எனவும் தி.மு.க தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திராவிடர் கழகத்தின் மூத்த தலைவரான கி வீரமணி பெரும் வருத்தம் கொண்டிருப்பதாக தகவல் கசியத் தொடங்கியிருக்கிறது.

 

தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் இணைந்தபோது

 

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி  தனக்கு நெருக்கமானவர்களிடம் ’’வேறு ஏதாவது பதவிக் கொடுத்திருக்கலாம். எதற்காக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும்?” என்று அதிருப்தி குரலோடு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

எப்போதும் கலைஞர் காலத்திலிருந்தே தி.மு.க.வில் எடுக்கப்படும் சில முடிவுகள் மற்றும் பொறுப்புகளில் ஏதேனும் ஆட்சேபணையோ, மனக்குமுறலோ இருக்குமாயின் தி.மு.க.வின் சீனியர் தலைவர்கள் அதனை வெளிப்படுத்தும் இடம்தான் பெரியார் திடல். அதைக் காது கொடுத்து கேட்பவர் தான் கி.வீரமணி. தங்க.தமிழ்ச்செல்வன் விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும். ஆனால், கலைஞர் காலத்தில் பெரியார் திடலுக்கு வந்த சில மனக்குமுறலுக்கு கலைஞர் மரியாதை கொடுத்து சரிப்படுத்தியிருக்கிறார். அதுமாதிரி இப்போது நடக்குமென்று கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள் தி.மு.க.வை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர்.

தி.மு.க.வில் தங்க.தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என்கிற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது வகையில் சலசலப்பும், மனக்குமுறலும் பெரியார் திடல் தொடங்கி தமிழகமெங்கும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது என்பது மட்டும் உறுதியாகிறது. இதை கலைஞர் போல ஆரம்பத்திலே சரிப்படுத்த போகிறாரா? அல்லது என் வழி தனி வழி கணக்கில் செயல்பட போகிறாரா தி.மு.க. தலைவர் ஸ்டாலின்?  என்ன நடக்கப் போகிறது என்பதிற்கு நாம் காத்திருக்கத்தான்  வேண்டும்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *