விஜய்க்கு வில்லனா விஜய் சேதுபதி?

slider சினிமா
விஜய் சேதுபதி – விஜய்

வரும் தீபாவளிக்கு இளைய தளபதி விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்பிறகு  நடிகர் விஜய் தனது  64-வது திரைப்படத்தில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தற்போது  தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் விஜய் சேதுபதியை அணுகியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி தரப்பில் கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக கூறப்பட்டுள்ளதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக  ‘பேட்ட’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *