ப.சிதம்பரம் இதற்கு சம்மதிப்பாரா?

slider அரசியல்
subramaniya swamy – chidambaram

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 21 அன்று சி.பி.ஐ.யால்  கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 30 –ம் தேதி வரை சி.பி.ஐ.யால் விசாரணை செய்யப்படவுள்ளார்.

தற்போது சி.பி.ஐ. காவலில் உள்ள ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் என்ன கேள்வி கேட்டாலும் அவர்  ‘யெஸ், நோ’ என்ற ஒரு பதிலை மட்டுமே திரும்பத் திரும்ப கூறி வருகிறாராம்.  இதனால் இதுவரை ப.சிதம்பரம்  அளித்த பதில்களில்  சி.பி.ஐ.க்கு திருப்தி இல்லையாம்.  இதனால் அடுத்தகட்டமாக,  உண்மை கண்டறியும் சோதனையை நடத்த விரும்புவதாக மத்திய புலனாய்வு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வாதிட வாய்ப்புள்ளது என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர்  தெரிவித்து உள்ளார்.

பொதுவாக, உண்மை கண்டறியும் சோதனையில் அவ்வாறு  நடத்தப்படும் நபர் அதற்கு சம்மதித்தால்  மட்டுமே   அந்தச் சோதனையை நடத்த முடியும்.  ஏற்கெனவே, யெஸ், நோ

மட்டுமே பதிலாக கூறிவரும் சிதம்பரம் இதற்கு சம்மதிப்பாரா என சி.பி.ஐ.க்கு அச்சமும் இருக்கிறதாம்.

இந்த  விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே ப.சிதம்பரத்துக்கு எதிராக பல கருத்துக்களை கூறிவரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், அதிரடி அரசியல்வாதியுமான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில், “சி.பி.ஐ. விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்றால் அவருக்கு  ‘நார்கோ டெஸ்ட்’ எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்’’ என பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *