மீண்டும் போலீஸ் வேடத்தில் அஜீத்

slider சினிமா

 

அஜீத் குமார்

தற்போது அஜித் தனது  60-வது படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள். இப்படத்தையும் தயாரிப்பது  “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்த போனி கபூர் தான். அதேபோல் படத்தை இயக்குவதும்  அதே வினோத் தான். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு 29ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமாகிறதாம்.

இது குறித்த தகவல் வெளியானதிலிருந்து அஜித் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.   இதற்கு பதிலும் இப்போது கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே,   ‘ஆஞ்சநேயா’,  ‘மங்காத்தா’ மற்றும்  ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அஜித்.  ‘மங்காத்தா’ படத்தில் சால்ட் அண்டு பெப்பர் லுக்கிலும்,  ‘என்னை அறிந்தால்’ படத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்டு ஃபிரஸ்ஸாக இளைமையான கேரக்டரிலும் நடித்திருந்தது அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் தான் வில்லனாக வந்து மிரட்டினார். அதேபோல்  இந்தப் படத்திலும் அருண் விஜய் தான் அஜீத்துடன் மோதப்போகிறார். இந்தப் படமும்  ‘என்னை அறிந்தால்’ படம் போலவே திரில்லர் படமாக இருக்கக்கூடும் என்று அஜித்தின் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருப்பதை அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் கமெண்ட்ஸ் மூலம் நன்கு அறிய முடிகிறது.

 

பாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *