விக்ரம் குடும்பத்திலிருந்து மீண்டுமொரு வாரிசு சினிமாவில்

slider சினிமா
அர்ஜூமன்

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம்  படம்தான் ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படம். இப்படத்தின் இயக்குநர் விஜய்ஸ்ரீ. இவர் ஏற்கெனவே கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த ’தாதா – 87’ படத்தை இயக்கியவர்.

படம் குறித்து இயக்குநர் விஜய்ஸ்ரீ கூறுகையில், ‘விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம், விநாயகர் சதுர்த்தி முதல் துவங்குகிறது.  இந்தி பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா மற்றும் காமெடியன் மொட்டை ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்போது படமாக்கப்படவிருக்கிறதாம்.

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *