டெல்லி போராட்டம் – வி.சி.க., தி.மு.க இடையே முற்றுகிறது மோதல்

slider அரசியல்
தி.மு.க நடத்திய டெல்லி போராட்டம்

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சார்பில் ஜம்மு- காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்ககோரி நேற்று (ஆகஸ்ட் 22-ம் தேதி) டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்திய அளவில் பெரும் பரபரப்புக்கு உள்ளான இந்தப் போராட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய கூட்டணி கட்சியான விடுதலைக் கட்சிகள் தலைவர் திருமாவளவன் ஏன் கலந்து கொள்ளவில்லை என்கிற பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும், சலசலப்பையும் எற்படுத்தியிருக்கிறது.

நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா, கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நேற்று ( ஆகஸ்ட் 22-ம் தேதி) நடைபெற்றது.

தமிழகளவில்  புகழ்மிக்க நெல்லை பல்கலைக்கழகத்தில், குற்றவியல் மற்றும் குற்ற நீதித்துறையில், ‘மீனாட்சிபுரம் மதமாற்றம்’ தொடர்பாக ஆய்வு செய்து தனது ஆய்வுக் கட்டுரையை திருமாவளவன் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தார். இதற்காகத்தான் அவருக்கு பி.எச்.டி. பட்டம் வழங்கப்பட்டது. தவிர்க்க முடியாத  இந்த காரணத்தால்தான், தி.மு.க. சார்பில் நடைபெற்ற டெல்லி போராட்டத்தில் பங்கேற்க திருமாவளவனால் செல்ல முடியவில்லை என்று அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.

ஆனால், முதல்முறையாக கலைஞர் மறைவுக்குபிறகு தி.மு.க. தலைவராக ஸ்டாலினை முன்னிறுத்தி தி.மு.க. சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது என்பது பின்வரும் காலங்களில் மேலும் இந்த முரண்களை முன்வைத்தே கொஞ்சநாளில் விடுதலை சிறுத்தைக் கட்சிகள் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் பற்றி நாம் சில நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

– விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *