சிதம்பரத்தை அடுத்து சசிதரூர்? – கலக்கத்தில் காங்கிரஸ்!

slider அரசியல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐயினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு ஐந்து நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். காங்கிரஸின் முக்கிய தலைவர் ஒருவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்துகே இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்னொரு முக்கிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரும் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படவுள்ளார் என்கிற தகவல் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் ஒரு நட்சத்திர விடுதியில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் உடல் இறந்த நிலையில் கண்டுடெக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சசிதரூருக்கும், சுனந்தாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்பு இந்தப் பிரச்னை அதிகமாகி அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.

இந்த விவகாரத்தில்  சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை குறித்து ஒரு போலீஸ் அதிகாரி சாட்சியமளித்தார். அப்படி சாட்சியமளித்த டெல்லி காவல் துறை அதிகாரியான அதுல் ஸ்ரீவத்சன், ‘’ சுனந்தாவின் உடலில் 15 காயங்கள் இருந்ததாக தெரிவித்தாகவும், அந்தக் காயங்கள் அவர் இறந்ததற்கு 12 மணி நேரத்திலிருந்து, நான்கு நாட்களுக்குள் ஏற்பட்டவை என்றும், அதனால் சுனந்தாவை அவரது கணவர் சசி தரூர் அடித்துத் துன்புறுத்தி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேசிய  முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சசிதரூர் மீது மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரிக்க கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு கைதில் சசிதரூர் மாட்டிக் கொண்டால் அது காங்கிரஸ் கட்சிக்கு, தவிர்க்க முடியாத அரசியல் நெருக்கடியாக அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *