25-வது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

slider சினிமா
டேனியல் கிரேக்

உலகளவில் பெரும் விற்பனை மார்க்கெட்டை கொண்டது ஜேம்ஸ் பாண்ட் படங்கள். இப்படங்களை கண்டுகளிக்க உலகமெங்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  கடைசியாக 2015-ம் ஆண்டில்  ‘ஸ்பெக்டர்’ திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்திருந்தார்.

‘ஸ்பெக்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இப்போது உருவாகிவரும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் டேனியல் கிரேக் தான் பாண்ட்டாக வருகிறார். மேலும், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில்  பாண்ட்டாக நடிக்கவிருப்பது ஒரு பெண் என்ற தகவலும் சில மாதங்களுக்கு வெளியானது.

இதுவரை பெயர் வைக்கப்படாமல் உருவாகிக் கொண்டிருந்த இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ‘நோ டைம் நோ டை’ என்று பெயரிட்டுள்ளார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

பாகன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *