தமன்னாவுக்கு திருமணம் –மாப்பிள்ளை தேடலில் பெற்றோர்கள்!

slider சினிமா

 

தமன்னா

 

நடிகை தமன்னா நடன இயக்குநர் பிரபுதேவாவை காதலிப்பதாக சமீபத்தில் பெரியளவில் தகவல் பரவியது. அதன்பிறகு தமன்னா வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் வரை சென்றதாகவும் கூட தகவல் வெளிவந்தது.

இந்த செய்திகளையெல்லாம் முழுமையாக மறுத்து வந்தார் தமன்னா.  இந் நிலையில் தற்போது, “எனக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவது உறுதியாகி விட்டது. ஆனால், அது காதல் கல்யாணம் இல்லை.  பெற்றோர்கள் பார்க்கும் நபரைத் தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று ஒரு பேட்டியில் அவரே தெரியப்படுத்தியுள்ளார். அவரது பெற்றோர் தமன்னாவிற்கு தற்போது தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர். தனக்கு ஏற்ற மணமகன் கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம் தமன்னா.

 

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *