காஜல் அகர்வாலின் இரண்டாவது இன்னிங்ஸ்

slider சினிமா
காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.  இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள  ‘கோமாளி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து  காஜல் அகர்வால் தற்போது  ‘கமல் – ஷங்கர்’ கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவரும்  ‘இந்தியன்- 2’  படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கள்ளார் எனும் தகவல் வந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாம். காஜல் அகர்வால் ஏற்கனவே சூர்யாவுக்கு ஜோடியாக  ‘மாற்றான்’ படத்தில் நடித்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

சென்ற வருடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் தவித்த  காஜல் அகர்வாலுக்கு, இப்போது தொடர்ச்சியாக பெரிய படங்கள் புக் ஆகிவருவதால் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆகியுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.

 

செந்தூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *