50 நடன அழகிகளுடன் யோகிபாபு!

slider சினிமா
yogi babu

தமிழ் சினிமாவில் இப்போது நகைச்சுவை ட்ரெண்ட் வெகுவாக செல்வாக்கு பெற்று வருகிறது. ஒரு படத்தின் காமெடி ட்ராக்கில் நடித்திருக்கும் நடிகர், ரசிகர்கள் சிரிக்கும்படி நடித்திருந்தால் போதும் அந்த நடிகருக்கு பெரிய நடிகர்கள் படங்கள் வரை உடனடியாக புக் ஆவது இப்போது தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணம். இந்த வரிசையில் தற்போது முதலிடத்தில் இருப்பவர் பிடிப்பவர் யோகிபாபு.

இவர் தனி ஹீரோவாக நடித்த ‘கூர்கா’ படம் கடந்த மாதம் வெளியானது. இன்னும் தர்மபிரபு உள்ளிட்ட சில படங்களும் வரவிருக்கின்றன. அதேநேரத்தில் யோகிபாபு மற்ற படங்களிலும் கதையின் நாயகர்களோடு சேர்ந்து நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தும் வருகிறார். மற்ற நாயகர்களோடு நடிக்கும்போது, யோகிபாபுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.

சமீபத்தில் யோகிபாபு மற்ற நகைச்சுவை பட்டாளங்களான தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’.   இந்தப் படத்தில் குழலூதும் கண்ணன் வேடத்தில் யோகி பாபு ஆவியாக வந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனமாடி பாடிய “இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே’’ பாடலுக்கான காட்சிகள் சிவராக் சங்கர் நடனமாஸ்டர் மேற்பார்வையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

பஸ் கம்பெனி முதலாளியாக தம்பி ராமையாவும், பிரபல தாதாவாக நான் கடவுள் ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் என்கிறார் இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன்.

குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகிவரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள் படக்குழுவினர்.  வயிறு குலுங்கும்படி சிரித்திட வைத்திடும் நகைச்சுவை படத்துக்கு வரவேற்பு அளிக்க தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் மறுத்ததுமில்லை. மறந்ததுமில்லை.

 

செந்தூரான்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *