முதன் முறையாக விவேக்!

slider சினிமா

 

இயக்குநர் பாலச்சந்தர் 1987-ம் ஆண்டு இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’  படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகர் விவேக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடியனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இந்த 30 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால், கமலுடன் மட்டும் ஒரு படத்திலும் இதுவரையில் நடிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு விவேக்கிற்கு அமையவில்லை. இது குறித்த பல நிகழ்ச்சிகளில் வருத்தப்பட்டு விவேக் பேசியும் உள்ளார்.

விவேக்கின் ஆசை இப்போது நிறைவேறுகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும்  ‘இந்தியன் – 2 படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள்  வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

‘இந்தியன் -2’ படத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு புது தகவல் வந்துக் கொண்டிருக்கிறது. சென்ற வாரம் சமுத்திரக்கனி  ‘இந்தியன் – 2 படத்தில்’ நடிக்கவுள்ளார் என்று வந்தது. இந்த வாரமோ விவேக் நடிக்கப் போகிறார் என்று செய்தி வந்திருக்கிறது. இன்னும் எத்தனை புதுப்புது தகவல்கள் அடுத்தடுத்த வாரங்களில் வரப் போகிறதோ?

 

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *