நடிகை லதாவுக்கு அ.தி.மு.க.வில் பதவி – தொண்டர்கள் வரவேற்பு!

slider அரசியல்

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். அவர்களோடு  ‘உரிமைக்குரல், நாளை நமதே’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லதா. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியவுடன் அதில் 3-வது பெண் உறுப்பினராக சேர்ந்த நடிகை லதா,  எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர்களில் முக்கியமானவர்.

 

திருமணமாகி சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தவரை, கடந்த 12 வருடங்களுக்கு முன்பு நடிகை ராதிகா தான் மெகா சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்க தமிழகம் அழைத்து வந்தார்.   அதுமுதல் தமிழகத்தில் வசித்து வரும் நடிகை லதா, தொடர்ந்து சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் நடித்தும் வருகிறார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தபோது சென்று நலம் விசாரித்தார். அப்போதே நடிகை லதா அ.தி.மு.க.வில் இணையப் போகிறார். அவருக்கு அ.தி.மு.க.வில் பொறுப்புகள் வழங்கப்படவிருக்கிறது என்பதாக செய்தி பரவியது. ஆனால், அப்போது எதுவும் நடக்கவில்லை. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் உறுப்பினராக நீண்ட காலம் லதா இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து தன்னை மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்காதது பற்றி தனது வருத்தத்தை பதிவு செய்தாராம் நடிகை லதா. மேலும், தனக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினால் இன்னும் தீவிரமாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தாராம். இவரின் கோரிக்கை தொடர்பாக ஓ.பி.எஸ். முதல்வர் இ.பி.எஸ்.ஸுடனும் ஆலோசித்தாராம். முதல்வருக்கும் இதில் விருப்பம் தானாம். இதனால் விரைவில் நடிகை லதாவுக்கு அ.திமு.க.வில்  பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், அது அனேகமாக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பதவியாக இருக்கலாம் என்றும் அ.தி.மு.க. தலைமை கழக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *