விவசாயத்துக்கு ஆதரவு கொடுக்கும் ஜெயம் ரவி!

slider சினிமா
ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இது ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம். இதனால், தான் நடித்துக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த படங்களை  விரைவில் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

இதன் முதல் கட்டமாக, தனது 25-வது பட வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார். ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் தான் இந்தப் படத்தின் இயக்குநர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார்.  திரைக்கதையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படம் முடியும் தருவாயில் சரியாக அடுத்த ஒரு படத்தை ஆரம்பிக்கும் வகையில் ‘என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அகமது  கூறிய கதையை ஓ.கே. செய்துள்ளார் ஜெயம் ரவி. தனது 26-வது படமாக அமையவுள்ள அந்தப் படத்திற்கு ‘ஜனகனமன’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பது ஜெயம் ரவிக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை தந்துள்ளதாம்.

இந்த படத்தில் ஜெயம் ரவி ராணுவ வீரராக நடிக்கவுள்ளார். இதிலும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது விவசாயத்தை நேசிக்கும் ஒரு ராணுவ வீரன் சந்திக்கும் பல்வேறு சவால்களைக் கொண்டதாக இந்தப் படம் உருவாகவிருப்பதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த இரண்டு படங்களிலும் விவசாயத்தை போற்றி ஜெயம் ரவி நடிக்கவுள்ளதால், அவருக்கு விவசாயிகள் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் கிடைக்கலாம்.

 

பாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *