தனுஷ் படத்தில் விஜய் சேதுபதி – எகிறும் எதிர்பார்ப்பு

slider சினிமா
அசுரன் தனுஷ்

 

தனுஷ் நடிப்பில் கடந்த வருடத்தில் `வடசென்னை’, `மாரி 2′ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் ஆவது  தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.  இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார்.

இதில் சினேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதனால்  ‘அசுரன்’ படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.  இதற்கு பதிலளிக்கும் முகமாக, தற்போது தனது  ‘அசுரன்’ படத்திற்கான தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, “இது இறுதிகட்ட படப்பிடிப்பு” என்றும் தெரிவித்து உள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் (கெஸ்ட்ரோல்) விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.   இந்தத் தகவல் படம் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது. அனேகமாக இந்த ஆண்டுக்குள் படம் ரிலீஸ் செய்யப்படும் என்கிறது படக்குழு.

 

தென்னாடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *