கடும் எதிர்ப்புக்கிடையில் கிரீன்லாந்து தீவை வாங்க முயலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

slider உலகம்

டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து மிகப் பெரிய தீவு. ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள இந்த தீவை வாங்குவதற்கு அமெரிக்க அதிபரான டிரம்ப் பல்வேறு வழிமுறைகளில் முயன்று கொண்டிருப்பதாகவும், இதற்கு கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

பசுமையும் பனிப்படலங்களும் கனிம வளங்களும் நிறைந்து எழில்கொஞ்சும் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து அட்லாண்டிக் கடலில் அமெரிக்காவுக்கு வடகிழக்கே சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது.  இந்தத் தீவு தன்னாட்சி கொண்டது. ஆனால் பொருளாதார ஆதரவு, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிற்காக டென்மார்க்க் நாட்டை நம்பியுள்ளது.  முன்பே ஒருமுறை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக வாங்குவதற்கான ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க முயன்றபோது  எங்கள் தீவு ஒன்றும் விற்பனைக்கல்ல என்ற பதிலை அந்நாட்டு அமைச்சகம் டிரம்பிடம் ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்ததாம்.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கிடையில் அமைந்துள்ள ஆர்டிக்கின் கனிம வளங்களுக்காக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் கிரீன்லாந்து மீது தனிக் கவனம் செலுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கடந்த மே மாதம், ஆர்டிக்கில் ரஷ்யா மற்றும் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறியுள்ளார் என்பதும் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

கிரீன்லாந்தை சேர்ந்த முக்கிய கட்சியான டேனிஷ் மக்கள் கட்சியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சோரன் எஸ்பர்சன்  என்பவர், “ட்ரம்ப் உண்மையிலேயே இப்படியெல்லாம் சிந்திக்கிறாரென்றால், அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்றுதான் அர்த்தம். அதற்கு இதுவே இறுதிச் சான்று. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் 50 ஆயிரம் பேரை அமெரிக்காவிற்கு விற்க வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் அபத்தமானது” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்களைச் சந்திக்க அடுத்த மாதம் கோபன்ஹேகனுக்குச் செல்லவிருக்கிறாராம். அவருடைய இந்தப் பயணந்திற்கு பல தொடர்பில்லாத காரணங்கள் அமெரிக்க அரசால் சொல்லப்படுகின்றன.

கிரீன்லாந்தை வாங்க முயலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சிக்கு  டென்மார்க் பிரதமரும், கிரீன்லாந்து பிரதமரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றும், ஆனால் கிரீன்லாந்து மக்கள் மற்றும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அனேகமாக டிரம்ப் சம்பந்தபடுத்தி உலகளவில் பேசப்படும் அடுத்த விவகாரம் இதுவாகத்தான் என்றே தோன்றுகிறது.

எஸ்.எஸ்.நந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *