இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் – பின்னணியில் பாகிஸ்தானா?

slider விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அங்கு இதுவரை ஒருநாள் தொடரையும், டி-20 தொடரையும் விளையாடி முடித்துள்ள நிலையில், இந்த இரண்டு தொடரையும் இந்திய அணியே கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாளில் மூன்று டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு இ- மெயில் வந்திருக்கிறது. அதாவது, அதிகாரப்பூர்வ இமெயிலுக்கு, தீவிரவாத அமைப்புகள் அல்லாத அடையாளம் தெரியாத அந்த மெயில் கடந்த வெள்ளிக்கிழமை வந்திருக்கிறது. அதில் வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து அரண்டுபோன பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உடனடியாக அதை சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐ.சி.சி.க்கு அனுப்ப, அது இந்திய கிரிக்கெட் போர்டான பி.சி.சி.ஐ.க்கு ஃபார்வர்ட் செய்யப்பட்டது.

 

இதன் பின்னர் பி.சி.சி.ஐ. மத்திய அமைச்சரகம் மூலம் ஆன்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருமாறு வலியுறுத்திருக்கிறது. இந்த இ- மெயில் தகவலை உறுதி செய்துள்ள பி.சி.சி.ஐ., அதில் இந்திய கிரிக்கெட் வீரர்களை கொல்லுங்கள் என்பது போல வாசகம் இருந்தாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மிரட்டல் குறித்து பி.சி.சி.ஐ.யின் சி.இ.ஓ. ராகுல் ஜாக்ரி, “மத்திய அமைச்சகத்துக்கு அந்த மிரட்டல் இ-மெயிலை அனுப்பினோம். ஆன்டிகுவா தூதரத்தை தொடர்பு கொண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி தெரிவித்துள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஐ.சி.சி.யோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ இதுவரை எந்த கருத்துகளையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதைத்தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஈமெயில் விவகாரத்தில் எந்த அமைப்பு இதன் பின்னணியில் உள்ளது அல்லது ஒருவேளை காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் பார்வைக்கு கொண்டுசெல்ல பாகிஸ்தான் அரசே செய்த காரியமா? போன்ற தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

  • நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *